Tuesday, May 7, 2013

மனசாட்சி

சகோதர சிநேகத்தில் நிலைத்திராதபோது குத்தாத மனசாட்சி சர்ச்சுக்குப் போகாவிட்டால் குத்துகிறதா?
 பிரசங்கங்களுக்கு கீழ்ப்படியாதபோது குத்தாத மனசாட்சி பிரசங்கம் கேட்காவிட்டால் குத்துகிறதா?
வேதகட்டளைகளை மீறும்போது குத்தாத மனசாட்சி வேதபுத்தகத்தை வாசிக்காவிட்டால் குத்துகிறதா?
சாதி, சபை பாகுபாட்டுக்கு குத்தாத மனசாட்சி திருவிருந்தில் பங்குபெறாவிட்டால் குத்துகிறதா?
ஆவியானவரை துக்கப்படுத்தும்போது குத்தாத மனசாட்சி... பாஸ்டரை துக்கப்படுத்தினால் குத்துகிறதா?
தரித்திரரை புறக்கணிக்கும்போது குத்தாத மனசாட்சி தசமபாகம் கொடாவிட்டால் குத்துகிறதா?

ம்ம்ம்..அப்படியானால் அந்த மனசாட்சிவேறொரு சேனலுக்குடியூன் செய்யப்பட்டிருக்கிறது….அந்த பிரபல சேனலுக்குப் பெயர் “(கிறிஸ்தவ) மதம்உலகின் அதிகபட்ச நேயர்களைக் கொண்டுள்ள பணக்கார சேனலான இதில் பரிசேயரும், பிசாசும் பங்குதாரர்கள்

இதன் நிகழ்ச்சிகளில் இயேசுகிறிஸ்து போல வேடமிட்டு நடிப்பது அந்திகிறிஸ்து.இந்தச் சேனலில் ஆடலுக்கும், பாடலுக்கும், பரவசத்துக்கும், பொழுதுபோக்குக்கும், செண்டிமெண்டுக்கும் பஞ்சமேயில்லை.இதில் ஒவ்வொரு ஞாயிறன்றும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி, யூத் ஸ்பெஷல், குழந்தைகள் நிகழ்ச்சி எல்லாம் உண்டு!இதன் நேயர்களுக்கும், பங்காளர்களுக்கும் கடைசி நாளில் தங்கள்ஜீவனைஅபராதமாக செலுத்தப்போவது உறுதி!அபராதத்துக்குத் தப்ப உடனே சேனலை மாற்றுங்கள்
வெகுசில நேயர்களையே கொண்டுள்ள இயேசுஎன்ற பிரபலமில்லாத சேனலுக்கு!
                                                                  

                                      ...........unknown author

1 comment: